Sunday, 14 July 2013

கயல்விழி

ஒளிர்விடும் கரு விழி
உள்ளுறை தேன் மொழி
கனவிலே திளைக்குதோ
கவின்மிகு மறை விழி?

பாரதி சொன்னதை
படித்ததை மறந்தனை,
வா! விழி! உன் விழி
வான்முகில் தாண்டவே!


சூரியன் போல நீ
சுடரொளி கொண்டு வா,
பாரினில் உன் புகழ்
பரவிட முந்து வா!

தமிழினத் தாரகை
தரணியில் உயர்ந்திட
பெருமகிழ் கொண்டு நான்
பாடுவேன் உனை வா!

No comments:

Post a Comment