Showing posts with label கருத்தாய்வு. Show all posts
Showing posts with label கருத்தாய்வு. Show all posts

Monday, 28 September 2015

வளர்மதி சிவா



கனடாவில் வாழும் இலங்கை தமிழரான இவர் எனக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக நட்பாக இருக்கின்றார். எனக்கு இவரை, இவரது எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது சரவணா ஹரி. மிக அற்புதமான பலப்பல கவிதைகளை இதுகாறும் படைத்திருக்கின்றார்.
மிகக் குறைவாகத்தான் எழுதுகின்றார். ஆனால் ஒவ்வொன்றுக்கும் இவர் தேர்ந்தெடுக்கும் களங்கள் அதியற்புதமானவை. வாசிக்கையில் நமது மனம் அப்படியே அக்களத்தில் அக்கணத்தில் லயித்துப் போகும்.
சுடச் சுட தேநீரும்
பத்திரிகைச் செய்தியுமாய்
நாட்டு நடப்புத் தெரிந்து கொள்ள
நாற்காலியில் அமர்ந்த கோமான்களே !
தொலைக்காட்சிப் பிரியர்களே!
சற்று நேரத்தில்
இறந்தவர் தொகை இன்னும்
எண்ணிக்கையில் அதிகரிக்கலாம்
இந்த மணித்துளியில்
காணாமல் போனவர்
பட்டியல் பெரிதாகியிருக்கலாம்
வன்புணர்வு செய்யப்பட்ட சகோதரிகள்
வாழ்வைத் தொலைத்துமிருக்கலாம்
ஒலி ஒளியோடு
மனித வேட்டைக் காட்சிகளை
மனிதம் தொலைத்த மனத்தோடு
உற்றுப் பார்க்கின்றீர்களா?
எதுகை மோனையுடன்
கற்பனை வண்ணம் கலந்தளித்த
கற்பழிப்புச் செய்தி
சுவாரஸ்யமாக இருக்கிறதா?
உயிருக்குப் போராடும்
ஜீவன்களின் கதறல்கள்
காதில் தெளிவாக விழவில்லையா?
இன்னும் ஒலியளவைக் கூட்டுங்கள்.
குருதி வெள்ளமா ?அதற்கென்ன?
அடுத்த சுற்றுலாப் பயணம்
அடுத்த கண்டத்தில் எங்கே போகலாம்?
தீர்மானியுங்கள் உணர்வற்ற தீரர்களே !
உயிர்த் துடிப்பு அடங்கும்வரை
சித்திரவதைச் செயல்கள்
கண்காட்சித் திருவிழாவாக இருக்கின்றதா?
ரசியுங்கள்
குழந்தைகள் குற்றுயிராக்கபடுகிறார்களா ?
கண்ணை மூடிக் கொண்டீர்களா?
அநீதி கண்டு பொங்கியெழ
அதற்கு மனிதம் வேண்டும்.
உயிருள்ளவரெல்லாம் மனிதரல்ல.
மனிதம் கொண்டவரே மனிதர்
என்னும் இக்கவிதையில் மனிதமிழந்த மனிதர்களின் குணங்களை சாடுகையில் வெட்கித் தலைகுனியத் தோன்றுகின்றது
வெற்றிடமாய் ஓரிடம்
---------------------------------------
சுப நிகழ்வுகளில்
முகூர்த்த நேரங்களில் மட்டுமே
தீய்ந்த வாசனை வருவதாய்
அடுக்களைக்கு அனுப்பப்படும் சாமர்த்தியம்
அறிந்தும் அறியாததுபோல் நடிக்கும்
அபலையவள்.
https://www.facebook.com/photo.php?fbid=858291740868247&set=a.470867989610626.110031.100000622888657&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் கைம்பெண்ணின் அவலக்குரல் கேட்டு மனம் கசியாதவர்கள் இருக்கமுடியாது
கண்டுபிடி......!!!
கயல்விழியாளே !
மறைந்திருந்து பார்க்கும்
மடி சுமந்த மல்லிகை மலரே!
என்னைக் கண்டு பிடி ...!!
https://www.facebook.com/photo.php?fbid=996246623739424&set=a.470867989610626.110031.100000622888657&type=1
எனத் தொடங்கும் இக்கவிதை நேற்று இவர் பதிவிட்ட்து. இனப்படுகொலையில் அழிந்த சமூகத்தின் வேதனை கண்ணாமூச்சி விளையாட்டின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது மனதை எனக்கு வெகுவாக பாதித்த்து.
வாசியுங்கள் தோழமைகளே, இவரது ஒவ்வொரு கவிதையும் களஞ்சியமே.

வாழ்க அன்னாரது எழுத்துப்பணி.

Sundara Pandian



என்றும் என் மரியாதைக்குரிய குரு ஸ்தானத்தில் நான் வைத்து போற்றக்கூடிய தரம் வாய்ந்த நண்பர், ஐயா Sundara Pandian ஐ எனக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகத் தெரியும்.
எனக்கு எழுதத் தொடங்கிய காலத்தில் இலக்கணம் தெரியாமலும், படிமமென்றால் என்னவெனப் புரியாமலும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில், நண்பரிடம் படிமம் குறித்து கேட்டு விளக்கம் பெறச் சொல்லி எனை என்றும் ஊக்குவிக்கும் தோழி Devi Rajan கூறினார். அவ்வாறு நண்பரிடம் கேட்டதற்கு அவர் நிறைய குறிப்புகளும், விளக்கமும் தந்தார். (அப்படியும் நான் கற்றுக்கொள்ளவில்லையென்பது வேறு கதை)
அவரும், தோழி ரேவா பக்கங்களும்தான் எனக்கு கவிதையெனில் தேவையற்ற சொற்கள் இருக்கக்கூடாது,. சொல்லவருவதை Crisp ஆக சொல்லவேண்டுமென சொல்லிக்கொடுத்தார்கள்
நண்பருடைய படைப்புகள் குறித்து சொல்ல எனக்கு தகுதி இல்லையென நான் நினைக்கிறேன். குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருடைய எழுத்தை நான் எவ்விதம் கருத்தாய்வில் சொல்ல?
மிக அற்புதமானவை. சொல்ல வரும் கருத்தில் மிகுந்த ஆழமும் நுணுக்கமும் நிறைந்திருக்கும். சமூக உணர்வு மிகுந்த ஆக்கங்களும், இயல்பான நகைச்சுவை இழையோடும் படைப்புகளும் மிகுந்திருக்கும்.
பறவைகளின் அலகுகளை மாலையாக்கி
அணிந்து இருந்தான் ஒருவன்..
ஒவ்வொரு அலகும் ஒவ்வொரு விதம்...
அங்குலி மாலா கேள்விப் பட்டிருக்கிறேன்
அலகு மாலா வை இப்போது தான் பார்க்கிறேன்.
பறவைகளின் பால் எனது விருப்பம் ஒரு
பசுஞ்செடியின் நுனியில் இருந்து மலரும் தளிர்
போல துளிர்த்தது...
தயக்கம் தவிர்த்து அருகே சென்று
மெல்ல ஒவ்வொரு அலகாக விரல் தடவி பார்க்கிறேன்...
இனம் தெரியா பறவையின் அலகு ஒன்று உயிர் பெற்று
என் விரலை கவ்விக் கொண்டது...
வலியில் துடித்தேன்..
ஓ வென அலறி
கனவு கலைந்து எழுந்தேன்...
கை விரலில் சிறிய காயம்...
இதே போல தான் அவளும் கடிப்பாள்..
ஆசை துளிர்க்கும் போதெல்லாம்...
எனும் கவிதையிலும்
மனம்
தூக்கி எறிந்தாய்...
சத்தம் இல்லாமல் உடைந்தது
பல நூறு துண்டுகளாய்.
அத்தனையிலும் நீ....
படிக்கத் தகுந்த
மனிதர்கள் கிடைக்காத போது
புத்தகங்களை நாடுகிறேன்...
எனும் கவிதைகளிலும் இவரது அழகிய உணர்வினை காணலாம்.
சமீப காலமாக தமிழ் இலக்கியங்களில் இருந்து பல பாடல்களை எடுத்து விளக்கத்துடன் பதிவிட்டு வருகிறார்.
ஒரு ஞாயிறு அன்று மீன் வாங்கச் சென்ற நிகழ்வினைக்கொண்டு அழகிய குறுந்தொகைப் பாடலொன்றினுக்கு விளக்கம் தருகிறார் இப்பதிவி;. வாசித்துப் பாருங்கள்.
https://www.facebook.com/sundara.pandian.…/…/771231789662786
எனது குரு ஸ்தானத்திலிருக்கும் இவரின் உன்னத படைப்புகளை நீங்களும் படித்து பயனுறுங்கள்.

வாழ்த்தி வணங்குகிறேன். உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் வளர்ந்து சிறக்கட்டும்.

குயலவன் அன்றில்




அன்புச் சகோதரரான இவர் சற்றேறக்குறைய இரு வருடங்களாக எனது நட்பில் இருக்கிறார்.
சரவணா ஹரிதான் எனக்கு இவரை அறிமுகம் செய்தார்.
அன்றே இவரது அநாயாசமான எழுத்து நடையில் மயங்கித்தான் போனேன். கிராமத்து வாழ்க்கையை கண்முன்னே விரிய வைத்து எளிமையான மொழியில் கனமான நிகழ்வுகளை சொல்லிச் செல்வார்.
தனது தாத்தா, அக்கா, அம்மா என்று உணர்வில் என்றும் வாழும் உறவுகளுடனான இவரது வாழ்வை கவிதை வரிகளில் விவரிக்கும்போது நமக்கும் அதுபோன்ற அம்மா, அக்கா, தாத்தா வேண்டுமெனும் தவிப்பு மேலிடுவதை தவிர்க்கமுடிவதில்லை
"காய்ச்சலாவென என் கழுத்தில்
நான் கைவைத்துப் பார்க்கும்போது
அவை அம்மாவின்
கைகளாயிருந்தது.!!
என்னும் கவிதையில் அம்மாவின் கையை நமக்கும் ஒரு நிமிடம் உணரச் செய்கிறார்.
“என்ன எழுதி என்ன பிரயோஜனம்?
ஒருநாள் கூட அம்மாவின்
கை பிடித்து உள்ளங்கை
பார்த்ததில்லையே.!!”
என்னும் கவிதையில் இவர் தரும் ஏக்கவுணர்விற்கு ஈடு இல்லையே.
"நீச்சத்தண்ணியில குனிந்து
முகம் பார்க்கிறாள்.
பொட்டில்லா நெற்றி நோக்கி
நகருகிறது
மிதக்கும் புளியம்இலை.!!"
இக்கவிதையில் நான்கு வரிகளில் என்ன ஒரு அநாயாசமாக கைம்பெண்ணின் அவலத்தையும் அதற்கு இயற்கையும் இசைவதில்லையெனும் மாண்பையும் விவரிக்கின்றார்.
"அக்கா மழைப்பைத்தியம்.
மழைன்னாலே அவளுக்கு கருவாடு மொச்சக்கொட்டை குழம்பு
வறுத்த புளியங்கொட்டை
மழைன்னாலே அவளுக்கு
மழை நின்ற பின்னான புளியமரத்து மழை.
தாழ்வாரத்துச்சாரலில் கால்நீட்டி நனைக்கும் கொலுசு.
குளிருக்கு அப்பாவின் சாணிப்பச்சை சட்டை.
மழைன்னாலே பேய்க்கதை
மழைன்னாலே இருக்கும் ஒற்றைக்கம்பளியில் என்னை அணைத்துக்கொண்டு அம்மாவாகத் தூங்குவது.
மழைன்னாலே கடைசியா பார்த்த அம்மா முகம்.
சேகர் மச்சான் கல்யாணம்.
எனக்கு மழைன்னாலே அக்கா கடைசியா சிரிச்சது.
மழைன்னாலே அக்கா.!!"
இக்கவிதையினை வாசிக்கும்போது எனக்கு சகோதர சகோதரிகள் இல்லையெனும் ஆழ்மன ஏக்கம் வெடித்து பீறிட்டுக் கிளம்புவதை தவிர்க்க இயலவில்லை.
“நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்
அவள் கொலுசின் முத்துகள் நான்கு
உதிர்ந்து போயிருக்கின்றன.
கண்ணாடியில் கூட ஒட்ட பசையற்று
அவள் பொட்டுகள் உதிர்கின்றன.
அவள் செருப்பின் உயரம்
குறைந்து கொண்டே வருகிறது.
அவள் சீப்பில் வெள்ளிக்கம்பிகள்
சிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மாத பட்ஜெட்டிலிருந்து பூக்கள்
காணாமல் போய்விட்டன.
இந்தக் கவனிப்பின்மையைப் பற்றிய
வருத்தங்கள் கூட இல்லாது போய்விட்டன..
ஆனால் நீங்கள் கவனிக்கிறீர்கள்
கொதிக்கும் குழம்பில் ரெண்டுகல் உப்பு
கூடியிருப்பதை.!!
இக்கவிதையை வாசித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? நான் பேச்சற்று பல நிமிடத்துளிகள் தவித்தேன். வாழ்க்கையை, அதில் ஒரு பெண்ணின் வலியை எவ்வளவு அழகாக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.
இன்னும் எண்ணற்ற கவிதைகள் இவரது பக்கம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. வாசியுங்கள். வாசித்து வாழ்த்துங்கள் இம் மாபெரும் கவிஞனை.

அன்புச் சகோதரருக்கு ஒரு வேண்டுகோள். புத்தகம் படிக்கவும் சினிமாக்கள் பார்க்கவும் நேரம் அதிகமாக செலவு செய்யவேண்டியதுதான். அதற்காக உங்கள் இரசிகர்கள் எங்களை தவிக்கவைக்காதீர்கள். மேலும் மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

காயத்ரி வைத்தியநாதன்




எனது நட்பு வட்ட்த்தில் ஒன்றரை வருட்த்திற்கும் மேலாக இருக்கும் தோழி இவர். இவரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது மற்றும் இரண்டு எனை தொடக்க காலத்தில் ஊக்குவித்த கவிஞர்களான Anitha Raj Thamizhk Kaathalan Thamizhkkaathalan ஆகியோரின் மூலமாக.
பழகுவதற்கு மிகவும் எளிமையான மென்சொல் மட்டுமே உபயோகிக்கும் அன்பான தோழியான இவர் வசிப்பது பாரத்த்தின் தலை நகரமானாலும், பிறந்து வளர்ந்த்து குடந்தையடுத்த நீடாமங்கலம்.
எனது வலை பக்கத்தை நான் சரியாக வடிவமைக்க முடியாமல் திணறிய காலகட்ட்த்தில் எனக்கு அறிமுகமாகி எனது வலை பக்கத்தை அழகாக வடிவமைத்துக் கொடுத்த நல் நட்பு இவர்.
பல்வேறு வடிவம் தாங்கிய படைப்புகளை தருபவர்
அறிந்தும் அறியாமலும்
முரண்
அவனதிகாரம்
என்ற தலைப்புகளில் குட்டிக் குட்டியாக பல கவிதைகளை படைக்கிறார்
கோலம்..!!
மனதை
மகிழ்ச்சியில் ஆழ்த்தி
ஒருநிலை தியானத்தில்
மூழ்க வைக்கவும்...
எனத் தொடங்கும் கவிதையில்
https://www.facebook.com/photo.php?fbid=679579292074170&set=a.177629192269185.40985.100000663160603&type=1
கோலத்தின் அழகையும் அதை பெண்கள் வரையும் விதங்களையும் அதன் சிறப்பையும் அழகுற மொழிந்திருக்கிறார்
நெல்லிக்கனி...!!
பச்சைவண்ணத்தில்
பளபளக்கும் மேனியோடு
என் வீட்டு
நெல்லிக்கனியும்
இன்முகத்துடன் எனை நோக்க.
எனத் தொடங்கும் கவிதையில்
https://www.facebook.com/photo.php?fbid=676395005725932&set=a.177629192269185.40985.100000663160603&type=1
நெல்லிக்கனி கொண்டு செய்யப்படும் ஊறுகாயை வைத்து மனிதம் குறித்த மாண்பை காட்டி கவிதை படைத்திருக்கிறார்
மௌனத்தை நோக்கி....!!
காதல் கசிந்துருகி, மனதைக் கனியவைத்து
என் உள்ளம் களிப்படையச்செய்த
தமிழ்க் கவிதைகளைக் காணவில்லை…!
எனத் தொடங்கும் கவிதையில்
https://www.facebook.com/photo.php?fbid=967697789928984&set=a.177629192269185.40985.100000663160603&type=1
அன்பின், நட்பின், பண்பின், காதலின் அத்தனை வெளிப்படுகளையும் ஏக்கத்தையும் மொழிந்து நம்மை வியக்க வைக்கிறார்.
இவர் மேலும் தமிழ்க்குடில் எனும் பொதுச் சேவை குழுமத்தின் தலைவராகவும் செயலாற்றி பல நல அரியச் செயல்களை செய்கிறார். சிறந்த பேச்சாற்றலும் உள்ளவர்.

அன்னார் அழகான அன்பான குடும்பத்துடன் மகிழ்வான வாழ்க்கையும், அருந்தமிழில் மேலும் பல படைப்புகளை கொடுத்து சிறபுகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி உங்களையும் வாழ்த்த வரவேற்கிறேன்

Wednesday, 23 September 2015

Dhass Mani



அன்பு நண்பர் Dhass Mani எனக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நட்பில் இருக்கிறார். அன்பாகவும் எளிமையாகவும் பழகக் கூடிய இனிய நண்பர். மென்சொல் மட்டுமே பேசத் தெரிந்தவர். தனது எழுத்துக்களிலும், நண்பர்களுடைய பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில் சுவை மிகுந்திருக்கும். எத்தகைய பதிவானாலும் அதை ஆழப் படித்து அறிந்து பின்னூட்டம் இடக் கூடியவர்.
தனது எழுத்துக்களாலும், நல்ல பழக்கத்தினாலும் அனைவரையும் கவர்ந்திருக்கும் அன்பு நண்பர், எல்லாத் துறைகளிலும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார். குடும்பம், சமூகம், காதல், நட்பு என பலத்தரப்பட்ட கவிதைகளை படைத்திருக்கிறார்.
"மகா கவி" பாரதிக்கு அர்ப்பணம்....
கவிஞன்
கற்பனை உலகில்
வாழ்கிறான் !! என
யார் சொன்னது ?...
https://www.facebook.com/photo.php?fbid=205672906272737&set=a.108650899308272.15654.100004900868519&type=1
எனும் இக்கவியில் மகாகவிக்கு மிக அழகான பாராட்டுதலை மொழிகிறார். வாசிப்போரின் மனம் விம்மும்.
உனக்கான சேவைகளில்
எனக்கான தேவைகள்
தீர்ந்து விடுகிறது..!!
https://www.facebook.com/photo.php?fbid=376198132553546&set=a.108650899308272.15654.100004900868519&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் இரு உள்ளங்களின் தவிப்புத் தெள்ளெனத் தெரிகிறது.
காணாத காலங்களில்
கவிதையாகி விடுகிறாய்..
அருகில் இருக்கையில் அதன்
அர்த்தம் உணர்த்தி விடுகிறாய்..
https://www.facebook.com/photo.php?fbid=437572259749466&set=a.108650899308272.15654.100004900868519&type=1
எனத் தொடங்கும் கவிதையிலோ அவ்வுள்ளத்தின் உள்ளூரும் பாசப்பிணைப்பு வரிகளில் நம்மையும் உணரச் செய்கிறது
ஒட்டுப் போட்ட சேல ஒன்னு
ஒடம்போட சுத்தியிருக்க..
https://www.facebook.com/photo.php?fbid=412342855605740&set=a.108650899308272.15654.100004900868519&type=1
எனும் இக்கவிதையில் ஏழ்மையின் கொடுமை வரிக்கு வரி தோய்த்து எழுதப்பட்டிருக்கிறது. இறுதியில் நான் செத்த அழ நீயிருக்கிறாய் மகளே, நீ செத்தா அழ யாரிருக்கா என கேட்கும் வரிகளில் உள்ளம் நைந்துதான் போகின்றது.
இப்படி பலப்பல படைப்புகள் தன் எளிமையான அழகான தமிழ் கொண்டு அனைவரும் படித்து ரசிக்கும்வண்ணம் எழுதி பதிவிட்டு வருகிறார்.

இந்த அழகிய நண்பரின் தமிழார்வம் மென்மேலும் வளர்ந்து இன்னும் பலப்பல படைப்புகள் படைத்து நமக்கு வழங்கட்டுமென நானும் வாழ்த்துகிறேன். நீங்களும் வாழ்த்துங்களேன்.

Malini Mala


நான் சற்றேறக்குறைய ஒரு வருட காலமாக இவருடன் நட்பிலிருக்கிறேன். அக்கா என்று அன்புடன் என்னால் அழைக்கப்படும் இவர் அற்புதமான எழுத்தாளர் என்று எனக்கு இவரை அறிமுகப்படுத்தியது எனது நீண்ட நாள் தோழி Devi Rajan
அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். பலதரப்பட்ட களங்களை எடுத்து மிக எளிதாக தனது ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை படைத்து வாசிப்போரை வசப்படுத்திவிடுகிறார்
அணை உடைத்த பொறுமையின் .................
*************************************************
வானம்
வேண்டாம் என்று
வீசிப் போட்டதெல்லாம்
விதியே என்று
ஏந்திக் கொண்ட
பூமி போல்
பொறுமையாய்
கடலும் .........
https://www.facebook.com/photo.php?fbid=870176059711083&set=a.303315743063787.75248.100001560918417&type=1
என்று தொடங்கும் கவிதையில் இயற்கை மனிதனை அழிக்கவும் செய்யுமெனக் கூறி சுனாமியால் அழிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
நீ விட்டுச்சென்ற இடத்தில் ......................
***********************************************
சின்னப் பூக்களின்
சிணுங்கும் விழிகள்
நேசம் வருடும்
பாசம் தவிர
எதையுமே
எவரிடமும்
இரப்பதே
இல்லை.
https://www.facebook.com/photo.php?fbid=845773692151320&set=a.303315743063787.75248.100001560918417&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் செல்ல தேவதையின் இழந்துவிட்ட குழந்தைதனங்களை ஏக்கத்துடன் மொழிகிறார்
வாழ்ந்து சொல்கின்றன.
**********************
.
வம்ச விருத்தி
எதிர்பார்ப்புக்களில்
பாரபட்சம் ஏதுமின்றியே
பரவி உதிர்க்கின்றன
மரங்கள்
விதைகளை.
https://www.facebook.com/photo.php?fbid=985484364846918&set=a.303315743063787.75248.100001560918417&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் வம்சத்தின் சிறப்பை வாழ்க்கையின் வெகுமதியை வெகுவாக சிலாகித்து எழுதியிருக்கிறார்.
இறுதியாக என்னால் இவரின் இந்த கட்டுரையா? கதையா? நிகழ்வாவென நினைத்து நினைத்து நான் துடிக்கும் ஒரு தாயின் வலிமிகுந்த வாழ்வை கண்முன்னே காட்டி கலங்கவைக்கிறார். ஆகவே இதை மட்டும் படிக்காமல் போகாதீர்கள்
பூப்போல் மனதை முள்ளால் கீறி வெந்நீர் ஊற்றி..........
https://www.facebook.com/malini.vasanth/posts/865612703500752:0

இவரது எழுத்தாற்றல் என்னை வியக்கவைக்கிறது. அன்னாரது பல படைப்புகள் பத்திரிகைகளில் வந்திருப்பதாக அறிகிறேன். விரைவில் உலகப்புகழும் இவர் பெறவேண்டுமென நான் வாழ்த்தி வணங்குகிறேன். நீங்களும் சகொதரியின் பதிவுகளை, கவிதைகளை வாசித்துவிட்டு பாராட்டலாம். நன்றி

Devi Rajan


எனக்கு முக நூலில் தொடக்க காலந்தொட்டு இருக்கும் வெகுசில தோழமைகளில் இவரும் ஒருவர். ஆரம்பகாலந்தொட்டே எனக்கு எழுத தூண்டுகோலாக இருந்து எனது எழுத்துக்களில் கவனம் செலுத்தி வருபவர். பல கவி நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதில், Devi Rajanக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு.

நான் எழுதத் தொடங்குமுன்பே இவர் எழுதிக்கொண்டிருந்தார். எண்ணங்களில் உதிப்பவைகளை அப்படியே வார்த்தைகளில் கொண்டு வரும் ஜாலம் கற்றவரோ என எப்போதும் நான் எண்ணுவதுண்டு.

ரத்தினச் சுருக்கமாக மூன்று நான்கு வரிகளில் ஆழமான கருத்துக்களை புதைத்துவைத்து எழுதி வாசிப்பவர் கண்களை விரிய வைத்துவிடுவார்

வழுவி விழும் சொற்களுக்கு
வடுக்கள் பதிகிறது ஆழமாக
சொல்லின் ஆற்றலே நம்மில் மாற்றம்

எனும் இக்கவிதையில் ஆழமாக பதிந்தது வடுக்கள் மட்டுமா? வழுவி விழும் சொற்களுக்குள் சிக்கிய உணர்வுகளும்தானே

தோழமையின் குறும்புத்தனங்களிலெல்லாம்
இதழ்கடையோரம் கசியும் சிறு குறுநகை என்பது
வார்த்தைகளில் அகப்பட்டுகொள்ளா
குறும்பு கவிதை..

எனும் இக்கவிதையை வாசிக்கும்போதே நமது இதழில் குறுநகை ஒட்டிக்கொள்கிறது

அத்தனை பொய்களுக்குள்ளும்
மெய்யாய் புன்னகை பூத்திருந்தது
பனித்துளியொத்த குட்டி நேசமொன்று

மெய்யான நேசத்தை எத்தனை மென்மை படுத்தி மேன்மைபடுத்தியிருக்கிறார்

மனப்பிறழ்வானவளின் நேசம்
பறவையின் அடிவயிற்றுச்
சூட்டை ஒத்திருந்தது
குழந்தைகளை காணும் போது மட்டும்

தாய்பாசத்தை எத்தனை அழகாக சின்னஞ்சிறு கவிதைக்குள் பொதிந்துவிட்டார்.

அயர்வான தருணமொன்றில்
நேசம் பிடிபடாமல்
திணறிய அந்த தருணத்தில்
முத்துகளாய் கொட்டி கிடந்தன
நட்சத்திரங்கள் அருகிருந்த
அவளின் ஆற்றுப்படுத்துதல்
மனிதபதம் தாண்டி வசீகரித்தது

மனிதபதம் தாண்டிய ஆற்றுப்படுத்துதல் அதீத அன்பின் பொழிதலில் மட்டுமே வாய்க்குமல்லவா, எத்தனை இலகுவாக மொழிகிறார்.

இவையெல்லாம் இவரது எழுத்தின் சில பக்கங்களே

இவ்வளவு அழகாக எழுதும் இவரது எழுத்தாற்றல் மேலும் மேலும் ஓங்கி இன்னும் பல படைப்புகளை தந்து வானளாவிய புகழ் பெற நானும் வாழ்த்துகிறேன். நீங்களும் வாழ்த்துக்களேன்

மறையூர் மு.பொ.மணியின் பாக்கள்



அன்பு நண்பரான இவர் சற்றேறக்குறைய ஒன்றரை வருடங்களாக என்னுடன் நட்பில் உள்ளார். எளிமையாக பழகும் குணமுடைய நல்ல நண்பர். அதிகம் பேச மாட்டாரோவென நினைத்தால் அவரது கவிதைகள் அழுத்தமாக பேசிவிடுகின்றன
தினசரி பதிவுகள் இடுவதில்லை. ஆனால் பதிவிடும் ஒவ்வொரு கவிதையும் பலகாலம் மனதில் நிற்குமளவு இருக்கும். இவர் தொடாத சமூக சிந்தனை இல்லையோவென நினைக்கத் தோன்றுகிறது. அன்பு, பாசம், காதல், பெண் சிசுக்கொலை, பாலியல கொடுமை, இயற்கையை சீரழிப்பதற்கு எதிராக, என பல்வேறு துறைகளிலும் கவியெழுதி நம்மை கவர்ந்திழுக்கிறார்.
பல படைப்புகள் பத்திரிகைகளில் வந்திருப்பதாகவும் அறிகிறேன்
அவள் உடுத்தும்
ஆடையிலும் மாம்பழ
வண்ணமிருக்கவேண்டும்..
என்ன சட்டை
வேண்டுமென்றால்
https://www.facebook.com/photo.php?fbid=652389208194071&set=a.124598884306442.16346.100002689947615&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் மழலையின் மாறும் விருப்பங்களை சொல்லி அதனழகை நமது மனதில் கொஞ்சச் செய்கிறார்
இவ்வுலகில் அழகென்று
நீயும் நானும் மட்டும்தான் !
ஆழ்கிணற்று மணலாய்
புதைந்துகிடந்த என்னை
உன் உள்ளங்கையிலெடுத்து
கோபுரமாக்கினாய் !
https://www.facebook.com/photo.php?fbid=655433257889666&set=a.124598884306442.16346.100002689947615&type=1
எனும் இக்கவிதையில் தனை உயர்த்தி அழகுபார்க்கும் உன்னதமானவளின் உள்ளம் பேரழகு என சொல்லி தானும் அவளும் தான் உலகில் தமக்கு அழகென மொழிந்து அசரவைக்கிறார்.
மூன்றாவதும் பெண்சிசுவானால்
கருவிலே கலைத்துக் கொள்(ல்)
விரதமிருந்து கடவுளை
நெய்யால் குளிப்பாட்டும்
அவன் வாயிலிருந்து வரும்
அருள்வாக்குச் சொல்தான் இது !
https://www.facebook.com/photo.php?fbid=589140724518920&set=a.124598884306442.16346.100002689947615&type=1
எனும் இக்கவிதையில் ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்து எழுதிநமது உள்ளத்தை உலுக்குகிறார். நான் இக்கவி குறித்து ஒன்றும் சொல்லப் போவதில்லை. நீங்களே படியுங்கள். படித்துவிட்டு இறுதி வரியை நீங்களே உரக்கச் சொல்வீர்கள்
அழகாய் புன்னகைப்பாள் மாதவி
இருபுறம் குழி விழுகையில்
யார் காணினும் அள்ளிக்
கொள்ளத்தான் தோன்றும்
மழலை மாறா முகம்...
https://www.facebook.com/photo.php?fbid=617346608364998&set=a.124598884306442.16346.100002689947615&type=1
எனும் இக்கவிதையை நான் படித்து முடித்தபோது சில நாட்கள் என் மனதை விட்டு பாரம் விலகவேயில்லை. இன்னமும் கூட படிக்கும்போதெல்லாம் மனம் துடிக்கிறது, ம்ம்,

அற்புதமான கவிஞர். நாம் அனைவராலும் அறியப்படவேண்டிய போற்றப்படவேண்டிய கவிஞர். அன்பு நண்பர்களே, தோழிகளே, நண்பர் மேலும் மேலும் சிறப்பாக எழுதி உலகப் புகழ் பெற வேண்டுமென வாழ்த்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்