Wednesday, 10 July 2013

நம்பிக்கை

அதிகாலை பனிமழையில் நனைந்தபடி
இருபுறமும் காட்டுமரம் ரசித்தபடி
கடும்பாதை பாதங்கள் அளந்தபடி
நடந்தோமே வியர்வையுடல் நனைந்தபடி.

முதல்மலையின் ஏற்றம்தனை முடிக்கும் முன்னர்
மூச்சுமுட்டி இருக்க இடம் தேடி நின்றேன்.
எனைக் கடந்து போன ஓரு பாட்டி வாயில்
முணுமுணுத்து சொன்னது அவன் திரு நாமம்.

மனமுழுக்க அய்யன் மேல் நம்பிக்கை
தளர் நடையாய் இருந்தாலும் தொடர்கின்றார்,
இளம் பருவம் என்றாலும் என் நடையில்
இல்லையந்த விறுவிறுப்பு கிஞ்சித்தும்.

ஒரு விஷயம் உள்மனதில் உறுத்தியது
நடைபயணம் போய்வந்து கற்றதென்ன?
மலையளவு நம்பிக்கை ஏற்றம் தரும்,
அந்நம்பிக்கை என் மனதில் என்று வரும்?

No comments:

Post a Comment