மேடைப் பேச்சாளன் நான்,
வார்த்தை ஜாலமும்,
வெடிக்கும் நகைச்சுவையும்,
கலந்து பேசி
கரவொலி வாங்கினேன்.
என்றாலும் என் கண்கள்
ஒரு ஜோடிக் கண்களை
கூட்டத்தில் தேடியது.
இடையிடையே தோன்றி
மின்னலாய் மறைந்தது.
தோன்றிய போதெல்லாம்
என்மனம் துள்ளியது.
இறுதியில் சிறுகதை
கலந்து முடித்தேன்,
என்றாலும் இருவிழி
காணாது கனத்தேன்.
கூட்டம் முடித்து
வாகனம் பிடித்து
வீட்டை அடைந்து
வாசலை திறந்தேன்.
அன்புடன் கையில்
ஆரத்தி கொண்டு
கண்கள் பனிக்க
உதடுகள் துடிக்க
அழுகையும் கொண்டு
ஆனந்தம் தின்று
அழைத்துச் சென்றாள்
அகத்தினுள் என்னை..!
எத்துணை பேர் எனை
ஏற்றிப் பகர்ந்தாலும்
என்னவள் கண்ணில்
மின்னிடும் கண்ணீர்
தந்திடும் சுகந்தனை
பிறர் தர இயலுமா?
வார்த்தை ஜாலமும்,
வெடிக்கும் நகைச்சுவையும்,
கலந்து பேசி
கரவொலி வாங்கினேன்.
என்றாலும் என் கண்கள்
ஒரு ஜோடிக் கண்களை
கூட்டத்தில் தேடியது.
இடையிடையே தோன்றி
மின்னலாய் மறைந்தது.
தோன்றிய போதெல்லாம்
என்மனம் துள்ளியது.
இறுதியில் சிறுகதை
கலந்து முடித்தேன்,
என்றாலும் இருவிழி
காணாது கனத்தேன்.
கூட்டம் முடித்து
வாகனம் பிடித்து
வீட்டை அடைந்து
வாசலை திறந்தேன்.
அன்புடன் கையில்
ஆரத்தி கொண்டு
கண்கள் பனிக்க
உதடுகள் துடிக்க
அழுகையும் கொண்டு
ஆனந்தம் தின்று
அழைத்துச் சென்றாள்
அகத்தினுள் என்னை..!
எத்துணை பேர் எனை
ஏற்றிப் பகர்ந்தாலும்
என்னவள் கண்ணில்
மின்னிடும் கண்ணீர்
தந்திடும் சுகந்தனை
பிறர் தர இயலுமா?
No comments:
Post a Comment