உயிரொன்று ஏது?
துளிர் விடும் புன்னகை
துயர் மழை போக்கிடும்
களிப்புடைக் கண்களும்
காதலில் மின்னிடும்.
உறைபனி உளம் தொடும்
உன்னெழில் பிம்பமோ
கரையிலா கவின்முகில்
கனவினில் ஆழ்த்திடும்.
மலரினில் மகிழம்
பூவென நீ வர
மரணத்தை வெல்லும்
மகிழ்ச்சியை நீ தர
துணையென்று வாழ்வில்
நான் கரம் பற்ற
உனையன்றி வேறோர்
உயிரொன்று ஏது?
No comments:
Post a Comment