Sunday, 19 May 2013

என் கெஞ்சல்

மாலை வேளையில்
மயக்கும் வண்ண பூஞ்சோலையில்
தனிமையில் அமர்ந்திருந்தேன்.
துணையே நீ வந்தாய்.
அருகமர்ந்து ‘அன்பே’ என,
அவசரமாய் முகந்திருப்பி
காணாததைப் போலிருந்தேன்.
இனியும் கெஞ்சுவாள், கொஞ்சுவாள்,
என இருந்த எனக்கு
ஏமாற்றம்.
என்ன ஆச்சு? போய் விட்டாளோ?
எனத் திரும்பி நோக்கினால்,
அழகுச் சிலை வேறொரு திசை
நோக்கியிருந்தது.
என் நிலையோ “அந்தோ”,
இப்போது நான் திரும்பி அவளிடத்தில்
கெஞ்ச, கொஞ்ச.....!

No comments:

Post a Comment