Saturday, 25 May 2013

இதயம் இடம் மாற

ஒரு கோடி ஆண்டுகள்
உனை காணாதிருந்தேனோ?
உலகெங்கும் உனைத் தேடி
அலைந்தே திரிந்தேனோ?
உனை கண்ட ஒரு நொடியில்
வாழ்வின் துயரமெலாம்
கரைந்தே போகாதோ?
கலக்கம் தீராதோ?
காற்றாய் வந்தென்னை
தழுவிக் கொள்ளாயோ?
உன் அன்பின் துணை யிருந்தால்
உலகை வெல்வேன் நான்,
இதயம் இடம் மாற
இனியும் தடையில்லை,
என்னன்பே இனிமேலும்
உனை விட்டு நீங்காது,
வாழ்வின் இறுதி வரை
உன் கரங்கள் பற்றி வாழ்வேன்.

No comments:

Post a Comment