Saturday, 11 May 2013

அமர காதல்



உள்ளத்தில் ஒப்புக்கு காதலித்து
உனைக்காண ஒப்பனையில் கருத்தரித்து
நானுனக்கு நீயெனக்கெனக்கூறி
புற அழகில் மதி மயங்கும்
காதலல்ல நமது காதல்...
உருவங்கள் காணாது உறவாடி
உன்னுயிரில் நான் கலந்து
என்னுயிராய் நீ வாழ்ந்து
உவமைகள் தேவையற்ற
அமர காதல் நமதடியே!

No comments:

Post a Comment