Friday, 17 May 2013

நான் நீ....

உருக்குலைந்து போன என்னை
உருவாக்க வந்தவள் நீ!
கருவற்ற கவிதையானேன்,
கருவாகி கலந்தவள் நீ!
நறுமண நல்லிதழாய் என்
நெஞ்சத்துள் மலர்ந்தவள் நீ!
சிறு துளியாய் நுழைந்தாலும்
முழுமதியாய் நிறைந்தவள் நீ!
கலை நூறு பயின்றாலும்
கிட்டாத இன்பமதை உன்
கண்ணசைவில் கண்டேன் நான்.
பெண்ணே உன் பேரழகில்
பேச்சற்றேன், மூச்சற்றேன்!
என்னிதய நாளங்கள்
உன் நினைவில் துடிக்கும்,
நானே நீயாக,
நீயே நானாக,
என் நாளும் உன்னன்பில்
உயிர்வாழ்வேன் பொன்மலரே!

No comments:

Post a Comment