Sunday, 26 May 2013

சுவாசக் காற்றே!



என் மடியில் நீ மலர்ந்து,
உன் இதழில் நான் விழுந்து,
கண்ணசைவில் கற்பனைகள்
பூக்க வைத்த பெண்மணியே!
கவிதைகளின் கருவாகி
காதலிசை தந்தாய் நீ!
உன் உணர்வை உட்கொண்டு
உயிர் வாழ வந்தேன் நான்,
வானவில்லின் வண்ணங்கள்
என் மனதில் பரவிடவே,
வான் மேகக் குவிவியலிலே
நான் பறக்க லானேனே!
என் மனதில் ஓவியமாய்
உன் நினைவுச் சின்னங்கள்,
என் வாழ்வே முழுமை பெற
காதல் வரம் தந்தவளே!
என் சுவாசக் காற்றாய் நீ
எப்போதும் இணைவாயா?

No comments:

Post a Comment