Friday, 24 May 2013

உயிரின் உயிரே!

அன்பு கொண்ட இருவரது
இரு மூச்சு ஒரு மூச்சாய்
ஆனதற்கு அடையாளம்
நீயன்றோ கண்ணா!
பிஞ்சு பாதத்தால்
நெஞ்சி லுதைத்தாலும்,
பத்து விரல் கொண்டு
அள்ளி பறித்தாலும்,
கழுத்தை கட்டி கொண்டு
காதை கடித்தாலும்,
மழலையின்பச்
செயலென்றே
மனம் கொள்ளும்- 
உன்விளையாட்டை  
எதிர் நோக்கி
எங்கள் உயிர் வாழும்...!

No comments:

Post a Comment