Saturday, 25 May 2013

ரணங்கள்

கவலைக ளற்று வாழ
காரணங்கள் தேவையில்லை.
கவலையே வாழ்க்கையாக
கனவுகள் வெறுமையாச்சு!
ரணங்களை களைய அச்சம்,
வடுக்களே வலியாகுமோ?
அன்பெனும் மருந்தெடுத்து
காலத்தின் கரங்கள் பற்றி
தொடர்ந்து நாம் தடவத் தானே
வடுக்களும் மறைந்து போகும்,
வாழ்வது இனிமையாகும்!

No comments:

Post a Comment