Friday, 17 May 2013

மதம்

எத்தனை மதங்கள் என்றாலும்
என்மனம் வாழும்
இறைவன் ஒன்றே!
அத்தனை மதங்களின்
அடிப்படை போதனை
அன்புற்றிருப்பதுவே!
எம்மதமும் இன்னோருயிரை
துன்புறுத்தச் சொன்னதில்லை,
கற்றுக்கொண்ட மனிதர்கள் தம்மில்
தெற்றிய சிந்தனைகள்.
ஒன்றே இறைவன்
என்றே கொண்டு,
நன்றே செய்தல்
சாலவும் நன்று!
அண்டத்தில் வாழும்
அனைத்து உயிர்க்கும்
அன்பினை வாரி வழங்குவோம்!
வாழ்க எல்லோர் வாழ்வும்!

No comments:

Post a Comment