ஊர் தெருவின் மூலையிலே
ஒரு கிணறு.
குடிப்பதற்கு கிடைத்ததுவாய்
அது ஒன்றே..
காலை முதல் மாலை வரை
உருளை சப்தம்.
இடையிடையே கேட்பதுவோ
இவர்கள் யுத்தம்.
நடை கிழவி கூட ஒரு
கலமெடுப்பாள்.
நாணிக் கொண்டு காளையரும்
குடமெடுப்பார்.
மழை பொழிந்தால் மனமகிழ
நீர் கிடைக்கும்.
மழை பொய்க்க மணல் தரையில்
மனம் புதைக்கும்.
கதை பலவும் பாசிகளில்
படிந்திருக்கும்.
அதில் மிகவும் சோகமொழி
வழிந்திருக்கும்.
இன்றந்த கிணறுமில்லை
கதையுமில்லை.
விரல் தொட்டு வீட்டினிலே
நீரெடுக்க
நிழல் படிவாய் நீள் கதைகள்
கிணற்றடியில்.....!
No comments:
Post a Comment