Friday, 16 August 2013

இருமல்

























அலுவலக வேலை முடிந்து
அவசரமாய் கிளம்பும் காலை,
அவள் அழைத்தாள்.
ஒரு நிமிடம் பேசுவதற்குள்
இருமுறை இருமினேன்.

அவள் கைவேலை
அத்தனையும் விட்டுவிட்டு
அவசரமாய் துளசியினை
அப்படியே பறித்தெடுத்து,
சுக்கு வெல்லம் சேர்த்து
குடுவையிலே கலக்கி
பறித்த துளசி சேர்த்து
பாங்காய் காய்ச்சி எடுத்து
வந்தவுடன் தந்தாள்
வாங்கி பருக சொன்னாள்.

இருமலுக்கே இப்படி
பொறுமையின்றி இருப்பாளோ!
கரும்பே உந்தன் கரம் பட்டால்
காய்ச்சல் கூட பறந்திடுமே!
கருமம் இந்த இருமல் மட்டும்
போகாதா என்ன?

No comments:

Post a Comment