Sunday, 16 June 2013

விடை கொடு

தேவதையே நீ வாராதே!
நீ வந்தால் எனக்குப் போக இயலாதே!
ஒரு வாரம் இடைவெளியில் ஊர் போய் வர
ஆதரவற்ற அம்மையையும் தம்பியையும் கண்டு வர
போய் வரவா என்று நான் கேட்டதற்கு
நீ போனால் வரமாட்டாய், வேறு பெண்ணை
மணமாக்கி மனம் மாறிச் சென்றிடுவாய்
எனச் சொல்லி பிணங்கி பின் தொடர்கின்றாயே,
நீயன்றி வேறு பெண்ணை என் சுவாசம்
நிச்சயமாய் ஏற்க்காது உறுதியடி!
பூக்களிடை பூத்திருக்கும் நெடும்பூவே,
புன்னகைத்து விடை கொடடி என்னுயிரே!

No comments:

Post a Comment