Thursday, 6 June 2013

வலிமை

இரு சிறார்கள் ரஷ்யாவின் ஒரு கிராமத்தில், 8 வயதும், 10 வயதும், மீன் பிடிக்க வெகுதூரம் சென்றனர். அப்போது, ஒரு பனி படிவத்தில் 10 வயது சிறுவன் கால் வைக்க அது உடைந்து அவனை உள் வாங்கியது. 8 வயது சிறுவன் அவனை மீட்க எவ்வளவோ முயன்றும் 10 வயது சிறுவனை உள் வாங்கி மூடியது.
8 வயது சிறுவன் என்னென்னவோ செய்து இறுதியில் ஓடிச் சென்று தூரத்தில் இருந்த ஒரு பட்டுபோன மரத்தில் ஏறி ஒரு கிளையை உடைத்து
பனி படிவத்தை அடித்து உடைத்து 10 வயது சிறுவனை மீட்டான்.
ஊருக்குள் சென்று நடந்த சம்பவத்தை சொன்ன உடன், அனைவரும் வேகமாக வந்து சம்பவ இடத்தை பார்வை இட்டனர்.
எல்லோரும் ஒரே கருத்தாய் சொன்னது, “இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இந்த சின்னஞ்சிறுவன் அந்த மரத்தில் ஏறி கிளையை உடைத்து இந்த சிறுவனை காப்பாற்றுவதா? வாய்ப்பே இல்லை!”
அப்போது அங்கு இருந்த ஒரு பெரியவர் சொன்னார், “இது நடந்திருக்கும் வாய்ப்புண்டு”
எல்லோரும் கேட்டனர், “எப்படி?”
பெரியவர் சொன்னார், “உன்னால் முடியாது என்று சொல்ல அங்கு யாரும் இருக்கவில்லை!!!!!”

(கேட்டது)

No comments:

Post a Comment