Wednesday, 19 June 2013

இரு நாள்

விழித்திரை சோகம்
விரைவாய் களைந்திடு,
குவியிதழ் மலர்ந்து
காதல் மொழிந்திடு.
இருநாள் இயல்பாய்
இல்லை நீயென
என்மனம் அறியும்,
இனியது மாறும்.
இனியதாம் வாழ்க்கை
இணைந்தே சுவைப்போம்!
காதற் சுவையை
கலந்தே புசிப்போம்!

No comments:

Post a Comment