Saturday, 15 June 2013

வந்து புடு

சுத்தி வர வயக்காடு,
நடுவில வைக்கப் பொதரோடு,
சொண பிக்கப் போகுதடீ,
சடுதியில வாடி புள்ள.

கன்னுக் குட்டியாட்டம்
நீ துள்ளி நடக்கறவ,
கன்னுக் குட்டி யணச்சு
போஸ் குடுத்து நிக்குறியா?

மாமன் நா வந்துருக்க
மருவாதியா வந்துபுடு,
காப்பித் தண்ணி வச்சுக் குடு,
கன்னத்திலயும் ஒண்ணு குடு.

No comments:

Post a Comment