கண்ணாடிப் பெட்டிக்குள்ளே
வெளுத்த மீனிரண்டு
கண்ணே உனைக் கண்டவுடன்
தாவுது பார் விழி திறந்து,
கருத்த உன் கயல் கொண்டு
காதலுடன் நீ அழைக்க,
காற்றலையும் கார்குழலை கடல்
அலையென நினைத்ததோ?
உன் கயல் கண்ட கயல் தன்
இனமென்று துடித்ததோ?
விதையற்ற விருட்சமென
உன் னிதயத்தில் நான் வீற்றிருக்க
இரு மீனுக்கு மங்கே
இடம் தருவாயோ?
வெளுத்த மீனிரண்டு
கண்ணே உனைக் கண்டவுடன்
தாவுது பார் விழி திறந்து,
கருத்த உன் கயல் கொண்டு
காதலுடன் நீ அழைக்க,
காற்றலையும் கார்குழலை கடல்
அலையென நினைத்ததோ?
உன் கயல் கண்ட கயல் தன்
இனமென்று துடித்ததோ?
விதையற்ற விருட்சமென
உன் னிதயத்தில் நான் வீற்றிருக்க
இரு மீனுக்கு மங்கே
இடம் தருவாயோ?
No comments:
Post a Comment