முழுமதியின் ஒளி மழையில்
முழுவதுமாய் நனைந்தபடி
தளிரான பாதங்கள்
தரைமேலே தவழுதடி.
விழியோர வெளிச்சத்தின்
கணை கொண்டு தாக்கியெனை
துளை செய்து என் நெஞ்சம்
உன்வாசம் கொண்டாயடி!!
குரல் பட்டு குயில் சிட்டு
எனை தொட்டு உயிரோடு
கலந்திட்ட பின்னாலே
கவி சொல்ல சொன்னாயடி!
எனிலுன்னை நான் கொள்ள
உனிலென்னை நீ அள்ள
மனமொத்த மலராக
மணம் வீச வந்தாயடி!
வாழ்வெல்லாம் இனிதாக
வசந்தங்கள் உருவாக
இணைந்திட்ட நெஞ்சத்தில்
இசை வெள்ளம் பொங்குதடி!
No comments:
Post a Comment