Thursday, 14 November 2013

கவிதைத்தேன்






















நெடு நேரம் எனக்காகக் காத்திருந்தாள்
நேசமுடன் என் விழியை பார்த்திருந்தாள்,
விழியோர மின்னல்கள் கொர்த்திருந்தாள்
விலகாமல் என் நெஞ்சைச் சேர்ந்திருந்தாள்

செவியினிலே சிறுதோடு அணிந்திருந்தாள்
செந்நிறமாய் பொன்மேனி பூத்திருந்தாள்
குவியதரத் தேன்சுவையைத் தோய்த்திருந்தாள்
குறுமணியாய் மூக்குத்தி முனை மிளிர்ந்தாள்

உடல் பட்டு உடை சுற்றி வேர்த்திருந்தாள்
உயிர் பற்றி தனதாக்கி வாழ்ந்திருந்தாள்
கடல் போன்ற மனம் கொண்டு காத்திருந்தாள்
கவிதைத்தேன் வழிந்தோட கலந்திருந்தாள்

No comments:

Post a Comment