Friday, 15 November 2013

நாயாய் மனம்
















சுமை சூழ்ந்த பொழுதுகளின்
தனிமைச் சுவடுகளை
பழுது பார்க்கும் சமயங்களில்,
ஆழ்மனதின் அடுக்குகளில்
பதுக்கிவைத்த
பிடித்த நினைவுகளை
பிரித்துப் பார்க்கத் தோன்றினாலும்,
அவிழ்த்தவுடன் அவை
உதிர்ந்து
ஓடிப்போகுமோவென பயத்தில்,
சுமைகளின் ரணங்களை மட்டுமே,
மீண்டும், மீண்டும்
நக்கிக் கொண்டிருக்கும்
நாயாய் மனம்!

No comments:

Post a Comment