Thursday, 14 November 2013

வேகப் பார்வைகள்

வியப்புறும் பார்வைகள்
விளக்கித்தருமோ
விடுகதைகளை?
விரைந்தோடும்
வாழ்க்கையின் சுவடுகளை
தேக்கி நிறுத்துமோ
வண்ணமிகு
வசந்த காலங்கள்?
நின்று, நிதானித்து நோக்க
நேரமின்றி தவிக்கும்
நீலக் கயல்களில்
நேசத்தின் புயல்
தரை தட்டும்வரை
ஓடும் சக்கரத்தில்
உருளும் வாழ்க்கையின்
பார்வைகள்
தெளிவற்றவைதான்....!

No comments:

Post a Comment