இரவுகளின் ஒளிப்பிழையில்
இருள் நீக்கி வாசித்தேன்.
அகம் தொட்ட பனி காற்றை
உயிர் வாழ சுவாசித்தேன்.
சில நேரம் எனை மென்று
அசை போட்ட பிறகு
தெளிவென்று நானெண்ணி
புதுக் கவிதை வாசித்தேன்.
கவிதைக்குள் கரம் பற்றி
கனவுக்குள் நான் போக
எங்கேயுன் கவிதை
எனக்கும்தான் காட்டேனென்றாள்,
மலரெடுத்து மடியமர்த்தி
மகிழ் கோப்பை இதழ் பொருத்தி
அவள் விழியில் எனை விதைத்து
உண்மையை சொன்னேன்,
புதுக் கவிதை தெரியாது,
பழங்கவிதை புரியாது,
எனை நம்பு!
நானறிந்த கவிதை
நீ மட்டுமே!
இருள் நீக்கி வாசித்தேன்.
அகம் தொட்ட பனி காற்றை
உயிர் வாழ சுவாசித்தேன்.
சில நேரம் எனை மென்று
அசை போட்ட பிறகு
தெளிவென்று நானெண்ணி
புதுக் கவிதை வாசித்தேன்.
கவிதைக்குள் கரம் பற்றி
கனவுக்குள் நான் போக
எங்கேயுன் கவிதை
எனக்கும்தான் காட்டேனென்றாள்,
மலரெடுத்து மடியமர்த்தி
மகிழ் கோப்பை இதழ் பொருத்தி
அவள் விழியில் எனை விதைத்து
உண்மையை சொன்னேன்,
புதுக் கவிதை தெரியாது,
பழங்கவிதை புரியாது,
எனை நம்பு!
நானறிந்த கவிதை
நீ மட்டுமே!
No comments:
Post a Comment