அறிவாளிகளின் கூட்டத்தில் நானொருவன்
அரற்றிக் கொண்டிருந்தேன்
அவர்களின் அமைதிசுவாசம்
எனக்கு
அலுப்பாயிருந்தது.
என் குரல் மட்டும் தனித்துக்
கேட்க
எனக்கு வெறுப்பாயுமிருந்தது.
இடை நிறுத்தி
மௌனமூச்சை சுவாசிக்க முயன்றேன்.
விழிகளில் ஈரம்
வடியத் தொடங்கியது.
அதுவரை மங்கலாயிருந்த
பார்வை
விழிநீர்த்திரை மறைப்பில்
வெளிச்ச பூமியை
வெளிக்கொணர்ந்தது.
அமைதியின் வடிவத்தில்
அறிவுச் சுடரை
காணத் தொடங்கியிருந்தேன்.
No comments:
Post a Comment