Thursday, 17 October 2013

சிரிப்பழகி


சிரிப்பழகி

முத்துப்பல் பதித்த
செம்பவள இதழினில்
பூத்த புன்சிரிப்பில்
என்னுயிர் வாழுமடி,

மலர் முகம் மலர
என்னுயிர் முழுதும்
வண்ணமாய் பூக்கும்
விந்தையின் வடிவமடி,

கனியிதழ் கோர்த்த
குருநகை கண்டென்
உளமது மின்னல்
கீற்றினை யுதிர்க்குமடி.

புன்னகை கொண்ட
கண்களுமென்ன
சொல்லுதல் காப்பிய
தீந்தமிழ் வரிகளடி!

கதுப்பினில் தெறிக்கும்
முறுவலின் மின்னல்
தோரணம் கொண்டே
வாழ்ந்திடும் இதயமடி!

மெல்லிய பூவின்
மலரிதழ் போன்று
மகிழ்ந்திடும் நாசி
விரிதலே சொர்க்கமடி!

இத்தனை யிருந்தும்
என்மனம் நாடும்
உன்மன மகிழ்வின்

வாசனையென்றே கூறுமடி!

No comments:

Post a Comment