Wednesday, 16 October 2013

உறுதி

தோழமை பூண்டு
தோள் கொடுக்க வந்த நீயின்று
இதயத்தில் மகுடம் சூடி
என்னிலே வாழ்கிறாய்.

உறவுக்கும் அப்பால்
உணர்வுகளால் ஒன்றானோம்.
கனவுலகப் பூவில்
நாமிருவர் வண்டானோம்.

வானுரையும் தேவர்களும்
வாழ்த்துரைக்கும் விதமாக
நாமுணர்ந்த காதலெனும்
காப்பியத்தின் பங்கானோம்.

நீயெனக்கு இணையாக
இப்பிறவி கண்டதற்கு
நன்றியெனும் ஒரு வார்த்தை
ஒருபோதும் ஈடாகாது.

இனி பிறக்கும் பிறப்புகளில்
நாம் காணும் உயர் காதல்
இவ்வுலகில் எவருக்கும்
வாய்க்காததாயிருக்கும்!

இது உறுதி!

No comments:

Post a Comment