Tuesday, 24 September 2013

வாழ்விருக்கு


வானம் துணைதேடி காத்திருக்கு,
மேகம் மழையாக பூத்திருக்கு,
மீனும் நதியோடு காத்திருக்கு,
மீதம் கடலோடு சேர்ந்திருக்கு!

முரட்டுப் பிடிவாதம் ஏனுனக்கு?
முடிவும் முதலாகும் வா நமக்கு,
கனவே நனவாக நாள் இருக்கு,
காயே தானாக கனிந்திருக்கு!

சேரன் வில் போன்ற கண்ணுனக்கு,
சேலை முந்தானை தாழெதுக்கு?
மாறன் மார்போடு சேர்வதற்கு

மாலை தோளோடு வாழ்விருக்கு!

No comments:

Post a Comment