பொன்னிற சூரியனால்
கண்களில் தேனாய்
கடலும்,
கரையும்,
கவிதையாய் அவர்கள்...
மகிழ்வின் உச்சத்தில்
மனதை பறிகொடுத்து
கண்களில் தேடலும்,
கைகளில் கிளிஞ்சலுமாய்...
உள்ளம் முழுதும்
ஒன்றாய் லயித்து
ஓரோர் அடியும்
உற்சாகமாய்...
அந்தப் பொழுதுகளில்
அறுவடை செய்தது
ஆனந்தம் மட்டுமே...
உனக்கேனிந்த தேடல்
ஒரு கேள்வியுமில்லை.
உற்சாகமாய் நானுமென,
ஓடி வந்த உயிர்கள்,
கிடைத்ததைக் கொண்டு
போகவா செய்வார்?
எடுத்தவை எதுவும்
எமக்கிலையென்று
விடுத்தே செல்வார்.
அந்த பொழுதின்
ஆனந்தம் மட்டுமே
அவருடன் செல்லும்,
ஆனந்தமாக...
கண்களில் தேனாய்
கடலும்,
கரையும்,
கவிதையாய் அவர்கள்...
மகிழ்வின் உச்சத்தில்
மனதை பறிகொடுத்து
கண்களில் தேடலும்,
கைகளில் கிளிஞ்சலுமாய்...
உள்ளம் முழுதும்
ஒன்றாய் லயித்து
ஓரோர் அடியும்
உற்சாகமாய்...
அந்தப் பொழுதுகளில்
அறுவடை செய்தது
ஆனந்தம் மட்டுமே...
உனக்கேனிந்த தேடல்
ஒரு கேள்வியுமில்லை.
உற்சாகமாய் நானுமென,
ஓடி வந்த உயிர்கள்,
கிடைத்ததைக் கொண்டு
போகவா செய்வார்?
எடுத்தவை எதுவும்
எமக்கிலையென்று
விடுத்தே செல்வார்.
அந்த பொழுதின்
ஆனந்தம் மட்டுமே
அவருடன் செல்லும்,
ஆனந்தமாக...
No comments:
Post a Comment