Sunday, 1 September 2013
பிரிய சகியே
வாழ்வின் ரணங்களை
மீறிய சுகங்களை
உன்னிடம் மட்டுமே
அறிந்தேன்...
மயிலிறகாலான
பார்வை கொண்டு
என் மனதை
தடவியபோது,
திகட்டாத
தெள்ளமுது தமிழால்
எனை அன்பே என
அழைத்த போது,
மலரினும் மெல்லிய
விரல் நுனி
என் தலை முடியை
கோதிய போது,
ரோஜா மலரின்
வாசம் கொண்ட
உன் சுவாசம்
என் மேல் பட்ட போது,
எத்தனை பிறவி
வேண்டுமானாலும்
இதற்காகப் பிறப்பேனடி,
என் பிரிய சகியே!
ஆனந்தமாக
பொன்னிற சூரியனால்
கண்களில் தேனாய்
கடலும்,
கரையும்,
கவிதையாய் அவர்கள்...
மகிழ்வின் உச்சத்தில்
மனதை பறிகொடுத்து
கண்களில் தேடலும்,
கைகளில் கிளிஞ்சலுமாய்...
உள்ளம் முழுதும்
ஒன்றாய் லயித்து
ஓரோர் அடியும்
உற்சாகமாய்...
அந்தப் பொழுதுகளில்
அறுவடை செய்தது
ஆனந்தம் மட்டுமே...
உனக்கேனிந்த தேடல்
ஒரு கேள்வியுமில்லை.
உற்சாகமாய் நானுமென,
ஓடி வந்த உயிர்கள்,
கிடைத்ததைக் கொண்டு
போகவா செய்வார்?
எடுத்தவை எதுவும்
எமக்கிலையென்று
விடுத்தே செல்வார்.
அந்த பொழுதின்
ஆனந்தம் மட்டுமே
அவருடன் செல்லும்,
ஆனந்தமாக...
கண்களில் தேனாய்
கடலும்,
கரையும்,
கவிதையாய் அவர்கள்...
மகிழ்வின் உச்சத்தில்
மனதை பறிகொடுத்து
கண்களில் தேடலும்,
கைகளில் கிளிஞ்சலுமாய்...
உள்ளம் முழுதும்
ஒன்றாய் லயித்து
ஓரோர் அடியும்
உற்சாகமாய்...
அந்தப் பொழுதுகளில்
அறுவடை செய்தது
ஆனந்தம் மட்டுமே...
உனக்கேனிந்த தேடல்
ஒரு கேள்வியுமில்லை.
உற்சாகமாய் நானுமென,
ஓடி வந்த உயிர்கள்,
கிடைத்ததைக் கொண்டு
போகவா செய்வார்?
எடுத்தவை எதுவும்
எமக்கிலையென்று
விடுத்தே செல்வார்.
அந்த பொழுதின்
ஆனந்தம் மட்டுமே
அவருடன் செல்லும்,
ஆனந்தமாக...
ஆணழகன்
அவன் ஆணழகன்தான்,
அந்த கல்லூரி வளாகத்தில்
அத்துணை பேரிலும்
காண்பதற்கு கவர்ச்சியாய்
கண்களில் துடிப்புமாய்,
கால் முதல்
தலை வரை
வெளுப்புமாய்,
விலை உயர்ந்த காரிலே
வந்திறங்கினான்.
அத்தனை பேரையும்
ஒரு நொடி
திரும்ப செய்யும்
அழகு!
அவனைச் சுற்றி
ஈக்களாய் பலர்,
அத்துணை பேருக்கும்
அவன் ஹீரோ,
என்னவளைத் தவிர...
என்னவளின் உள்ளத்தில்
என்னைவிட அழகாய்
என்னைவிட அன்பாய்
என்னைவிட கவனிப்பாய்,
என்னைவிட கருணையாய்
என்னைவிட காதலாய்,
ஒருவரையும்
காணவில்லையாம்.
உடலழகும், விலையுயர்ந்த
உடையழகும்,
காரழகும், கவர்ச்சி மிகு
பேச்சழகும்
கவராத அவள்,
எனக்கே எனக்கென்று
எப்போதும் பூத்த மலர்
என்னிதய தேவதை!
எனக்கிதை விட
வேரென்ன வேணும்?
Subscribe to:
Posts (Atom)



