வயலில் வேலை செய்து கொண்டிருந்த மைக்கேலைப்
பார்த்த மதன் தன் படிப்பறிவை அவனுக்குக் காட்ட எண்ணினான். மைக்கேலை நெருங்கி
அவனிடம், “நான் ஒரு கேள்வி
கேட்பேன், பதில் சொல்லணும்”
என்றான். மைக்கேல்
மதனிடம், “எனக்கு உன் போல
படிப்பறிவு இல்லை, என்னிடம்
கேட்டால் நான் என்ன சொல்வது?” எனக் கேட்டான்.
மதன், “பரவாயில்லை, நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில்
கூறாவிட்டால் எனக்கு ஐந்து ரூபாய் தா, நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில்
கூறாவிட்டால் நான் உனக்கு ரூபாய் ஐநூறு தருகிறேன்” என்றான். மைக்கேலும் ஒத்துக் கொண்டான்.
மதன், “ஒளியின் வேகம் என்ன?” என்று கேட்டான். மைக்கேல், “என்னப்பா, நான்தான் படிக்காதவன் என்று தெரியும், என்னிடம் இப்படிக் கேட்டால் என்ன நான் செய்வது?”
என்று கூறி மடியில்
வைத்திருந்த ஐந்து ரூபாயை எடுத்து மதனிடம் கொடுத்தான். பின்னர் மதன் மைக்கேலிடம்,
“நீ கேள்” என்றான்.
மைக்கேல் சிறிது யோசித்து விட்டு, “ மூன்று தலை, நான்கு கால்கள், ஏழு கைகள் உள்ள மிருகத்தின் பெயர் என்ன”
என்று கேட்டான். மதன்
திகைத்துப் போய், “அப்படி ஒரு
மிருகம் இருக்கிறதா?” எனக் கேட்டான்.
மைக்கேல் பதில் ஒன்றும் கூறவில்லை. மதன் தனது
லேப்டாப்பை திறந்து கூகுள் தொடங்கி மற்ற தளங்களில் தேடிப் பார்த்துவிட்டு, பின்னர் தோல்வியை ஒப்புக் கொண்டு, ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்து விட்டு
மைக்கேலிடம், “அந்த மிருகத்தின்
பெயர் சொல்லு” எனக் கேட்டான்.
மைக்கேல், “எனக்கும் தெரியாது” எனக் கூறி, இன்னொரு ஐந்து ரூபாயை எடுத்து மதனிடம் கொடுத்து
விட்டு நடையை கட்டினான்.
No comments:
Post a Comment