அசுரர்களும், தேவர்களும், பாற்கடலை
மந்தாரமலையைக் கொண்டு, வாசுகியை கயிறாக்கி கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது.
அந்த அமிர்தத்தை குடிக்க எனக்கு, உனக்கு என அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடைய
போட்டி வந்தது.
அப்போது
அங்கு வந்த நாராயணர், “இந்த அமிர்தத்தை எல்லாருக்கும் வழங்குகிறேன். ஆனால், ஒரு
நிபந்தனை. யாரும் நீட்டிய கரங்களை மடக்காமல் பெற்று, மடக்காமல் வாயில் அமிர்தத்தை
ஊற்றி குடிக்க வேண்டும்” என்றார்.
முதலில்
அசுரர்களுக்கு வழங்கப் பட்டது. கரங்களை மடக்காமல் வாங்கி அப்படியே குடிக்க
வேண்டுமென நிபந்தனையாதலால், அசுரர்களால் அந்த அமிர்தத்தை வாங்கி வாய்க்கு கொண்டு
செல்ல முடியவில்லை. எல்லாம் சிந்தி விட்டது.
தேவர்களுக்கு
கொடுக்கப் பட்ட போது, அவர்கள், ஒரு உபாயம் கண்டனர். முதலாமவர் வாங்கி கையை
மடக்காமல் அடுத்தவர் வாயில் ஊற்றிக் கொடுத்தார். இரண்டாமவர் வாங்கி மூன்றாமவர்
வாயில் ஊற்றிக் கொடுக்க இப்படியாக ஒவ்வொருவரும் குடித்து கடைசி தேவர் வாங்கி
முதலாமவருக்குக் கொடுக்க அனைவரும் அமிர்தம் உண்டனர்.
நாம்
எப்போதும் அடுத்தவருக்கு நன்மை செய்யும் போது நமக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
(அப்போதே தேவர்கள் நம்மள ஏமாத்திட்டங்க போல)

No comments:
Post a Comment